Friday 30 August 2019

கிறுக்குப்பய கிழவி

இது வாடிக்கையான நேரம் தான்
மாணிக்கத்தின் வருகையை பார்த்தபடி
கிழவி வெத்தலை மடித்தாள்...

என்ன கிழவி உன் பேரன்
வந்தா தான் சோறு போடுவியா
வேலைய பாருடி கிறுக்கு சிறுக்கி ..

என்ற  பாட்டனின் பேச்சு
கிழவியை கேலி செய்த
அரை நொடியில்
மாணிக்கம் வந்தான்....

என்ன கிழவி சாப்டயானு கேட்டவனை
"கிறுக்குப்பய" எனக்கென்ன
நீ சாப்பிடுனு வந்தால் வறுக்கி வரடீ உடன்...

Thursday 29 August 2019

நடைபாதை நகரம்( நரகம்)

கார்பன் கரி படிந்த முகமும்
கிழிந்த சட்டையும் அவனை அடையாள படுத்தியது
அவன் இந்த நகர வாழ்க்கையின்
நடைபாதை மனிதன் என்பதை..

காட்சி பொருளாக்கப்பட்ட உணவு கடைகளை
வெரித்து  பார்த்த படி அவனின்
அருந்த செருப்புகள் நகர மறுத்தன...

தினமும் பசியுடன் தோற்றும்
இன்றும் அவன் கேட்க தொடங்கி விட்டான்

ஐயா...
இந்த புத்தகம் பத்து ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று.