Friday, 12 March 2021

எனை தாங்கும் ஓடமே

 கரைதாண்டி ஒரு நகரமாம்,

கடலோடு ஒரு பயணமாய்...


விண்ணோடு முகில் ஓவியம்,

கண்ணெட்டும் கடல் கம்பளம்..


நினைவுகள் எல்லாம் அலைகளாய்,

கனவுகள் எல்லாம் கரைகளாய்...


உன்மீதொரு கடல் பறவையாய் ஆனேனே, 

எனை தாங்கும் ஓடமே...